செய்திகள்

சென்னையில் 150 ஆக குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.15-

சென்னையில் 150 ஆக குறைந்தது ஒரு நாள் கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் நேற்று 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,428 ஆண்கள், 1,030 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 458 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 270 பேரும், ஈரோட்டில் 175 பேரும், சேலத்தில் 164 பேரும், சென்னையில் 153 பேரும், திருப்பூரில் 146 பேரும், தஞ்சாவூரில் 171 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும்

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 288 ஆண்களும், 10 லட்சத்து 50 ஆயிரத்து 75 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 26 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 39 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 55 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 557 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,021 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 244 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் நேற்று 40 ஆயிரத்து 26 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 569 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 285 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 880 படுக்கைகள் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *