சென்னை: 2 சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
எண்ணூர்- 260 ,பாரிஸ்- 254 ஐஸ் ஹவுஸ்- 224 மணலி புதுநகரம்- 206 பொன்னேரி- 206 பேசின் பிரிட்ஜ்- 197 மணலி- 183 வடபழனி- 182 மேடவாக்கம்- 177 கும்மிடிப்பூண்டி- 169
தொண்டையார்பேட்டை- 166 கத்திவாக்கம்- 165 நுங்கம்பாக்கம்- 161 சாலிகிராமம்- 160
சைதாப்பேட்டை- 156 துரைப்பாக்கம்- 156 பெரம்பூர்- 150 அமிஞ்சிக்கரை- 150
சோழவரம்- 140 நாராயணபுரம்- 139 ,அடையார்- 138 காசிமேடு- 133 வேளச்சேரி- 127
வளசரவாக்கம்- 121 மாதவரம்- 120 புழல்- 119 நெற்குன்றம்- 118 ராஜா அண்ணாமலைபுரம்- 117 கொரட்டூர்- 116 சோழிங்கநல்லூர்- 109 மடிப்பாக்கம்- 107
கண்ணகி நகர்- 105
மெட்ரோ சேவை
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி சென்ட்ரல் அருகே நின்றது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் தற்போது மெட்ரோ ரயில் சேவை சீரானது.
40 கி.மீ தொலைவில்.…!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தெற்கு நோக்கி நகர்கிறது.
விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து 6 உள்நாட்டு விமானங்களும், ஒரு சர்வதேச விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானங்கள் முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
![]()





