சென்னை, ஆக. 25–
சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கு திருமணமாகி தெரேசா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் தனது வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், சிவக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு சிவக்குமார் தனது மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், இன்று காலை குடும்பத்தினர் வெளியே சென்ற சமயத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மீண்டும் குடும்பத்தினர் வீடு திரும்பிய நிலையில், உள்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்த போது, தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





