செய்திகள்

சென்னையில் பரபரப்பு: மின்சார பைக் பேட்டரி வெடித்து 17 வாகனங்கள் தீயில் கருகியது

சென்னை, ஏப். 14–

சென்னையில் மின்சார பைக்கின் பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பைக்குகள் எரிந்து நாசமாகியது.

சென்னை போரூர் அருகே மின்சார பைக் விற்பனை கடையில் நேற்று மாலை பைக்கின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காததால் கடையில் இருந்த 17 பைக்குகள் எரிந்து நாசமாகின.

சமீபகாலமாக மின்சார பைக்கின் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.