செய்திகள்

சென்னையில் நேற்று 1,175 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை 31–

சென்னையில் நேற்று 1,175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–

தமிழகத்தில் 59 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,560 ஆண்கள், 2,304 பெண்கள் என மொத்தம் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 51 பேரும் அடங்குவர்

அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேரும், செங்கல்பட்டில் 354 பேரும், திருவள்ளூரில் 325 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 25 லட்சத்து 1,919 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 615 ஆண்கள், 94 ஆயிரத்து 336 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 27 பேர் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை சென்னையில் 83,890 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 78,178 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னை யில் 1,126 பேர் உட்பட 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலையில், சென்னையில் 12,785 பேர் உட்பட தமிழகம் முழு வதும் 57,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 2092 பேர் மரணம்

இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 65 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் என 97 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். கொரோனா தொற்றுக்கு இதுவரையில் 3,838 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2,092 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 807 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 575 பேரும், ரெயில் மூலம் வந்த 425 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 583 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 98,767 பேரும் செங்கல்பட்டில் 14,197 பேரும் திருவள்ளூரில் 13,481 பேரும் மதுரையில் 10,838 பேரும் காஞ்சிபுரத்தில் 8,604 பேரும் விருதுநகரில் 7,502 பேரும் தூத்துக்குடியில் 6,812 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 11,970 பேரும், 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 1 லட்சத்து 98,093 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29,915 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்களில் இதுவரை 25 லட்சத்து 97 ஆயிரத்து 862 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 61,202 பரிசோதனைகள் நடைபெற்றது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *