செய்திகள்

சென்னையில் தலைமை செயலாளர், அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை

சென்னையில் தலைமை செயலாளர், அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை

சென்னை, ஏப்.25

சென்னையில் இன்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா நோய் தடுப்பு சம்பந்தமாக மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினார்கள்.

முதலில் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திய இந்த குழுவினர் பின்னர் ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக சென்னை வந்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருபுகழ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையிலான மத்திய குழுவினர் உடனான ஆலோசனை கூட்டம் இன்ற ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கோ. பிரகாஷ், காவல்துறை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் ராஜேந்திரகுமார், தா. கார்த்திகேயன், அபாஷ் குமார், கா. பாஸ்கரன், மத்திய குழு உறுப்பினர்கள் அனிதா கோக்கர், சூரியபிரகாஷ், லோகேந்திர சிங், வி.விஜயன், சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி, இணை கமிஷனர்கள் பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன் (பணிகள்), ஜெ. மேகநாத ரெட்டி, கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் வட்டார துணை கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்ததால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சகங்களுக்கு இடையேயான 6 உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நிலைமையை நேரில் ஆய்வு செய்தன. அந்த மாவட்டங்களில் கொரோனோ பரவுவதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் வழங்கி இருக்கின்றன.

இதேபோல் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள சென்னை, ஆமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக கூடுதல் செயலாளர்கள் தலைை-மையிலான 4 உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்து இருப்பதாகவும், இந்த குழுக்கள் அந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி மத்திய அரசு அதிகாரி டாக்டர் திருபுகழ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது.இன்று சென்னையில் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *