சென்னை, மே 17–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றும் முன்தினமும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறிய நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சவரனுக்கு ரூ.200 குறைவு
அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ. 6,770 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,920 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,240 ஆகவும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளியை பொறுத்தவரையில்சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ. 92.50க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.92,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.