செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, மே 4–

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-இல்ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-இல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.4,452 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.80 பைசா உயர்ந்து, ரூ.75.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1800 உயா்ந்து ரூ.75,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *