செய்திகள் வர்த்தகம்

சென்னையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.208 உயர்வு

சென்னை, ஏப். 22–

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 208 உயர்ந்து, ரூ.36,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்றும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,537 க்கும், சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *