சென்னை, ஜன. 25–
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் இந்தியா – -இங்கிலாந்து டி20 போட்டியில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரெயில்வேயின் சென்னை பிரிவு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, போட்டியின் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புறநகர் ரெயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பார்வையாளர்கள். சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் ரெயில்கள்
இதே போல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதை ஒட்டி கடற்கரை – வேளச்சேரி – கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டி20 கிரிக்கெட் முடிந்த பிறகு ரசிகர்கள் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம். சென்னை கடற்கரை-வேளச்சேரி- கடற்கரை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.50-க்கு புறப்படும் ரயில் இரவு 10 மணிக்கும், இரவு 10.20-க்கு புறப்படும் ரயில் இரவு 10.30-க்கும் புறப்பட்டு வேளச்சேரி சென்றடையும். மறுமார்க்கமாக வேளச்சேரியில் இருந்து இரவு 10.27-க்கு புறப்படும் ரயில் இரவு 10.37-க்கு புறப்பட்டு கடற்கரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#chennai #chepauk #t20 cricket #India vs England