செய்திகள்

சென்னையில் ஜனவரி 16–ந் தேதி முதல் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி

40 நாடுகள் பங்கேற்பு

அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை, டிச. 1–

சென்னையில் ஜனவரி 16, 17, 18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தக் கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தக கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர். பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்களின் நாட்டின் பெருமைகள், சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் வைக்கலாம் எனவும் புத்தகங்களை படிப்பதற்கான படிப்புரிமை குறித்தும் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவி தொகை வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இனி வரும் ஆண்டுகளில் நூறு நாடுகளை சேர்ந்தவர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *