சென்னை, அக். 7–
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் என்.ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைக்காவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின்குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் மற்றும் அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்குழுவினர் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், மாதவன், தலைமைக்காவலர்கள் சதீஷ்குமார், பிரபாகரன், மாரிமுத்து அடங்கிய காவல் குழுவினர்கள்,
சிறப்பு குற்றப்பிரிவு காவல்குழுவினர் உதவி ஆணையாளர் வி.தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் நிர்மல்குமார், ரமேஷ்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முகமதுயாசியா, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவபாலகுமார், தலைமைக் காவலர்கள் சந்திரசேகரன், சிவகுமார், .வேதஸ்ரீகுப்புராஜ் அடங்கிய காவல்குழுவினர் மற்றும் நவீன காவல்கட்டுப்பாட்டறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக்காவலர் வினோத்ராஜ்,
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்த புழல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் எமரோஸ், தலைமைக்காவலர் சிவகுமார், முதல் நிலைக்காவலர் யுவராஜ், காவலர் சிவராமன் அடங்கிய காவல் குழுவினர்,
மேலும் ஹரியானா மாநிலம், போலீஸ் அகாடமியில் நடைபெற்ற 74வது அனைத்து இந்திய விளையாட்டு போட்டியின் ஆணழகன் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமைக் காவலர் ஏ. புருஷோத்தமன், தலைமைக் காவலர் செல்வகுமார் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண் இன்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
![]()





