செய்திகள்

சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 30–

சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.

சென்னையை அடுத்த புதுப் பெருங்களத்தூர், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் சென்னை மேற்கு மாம்பலம் 7வது நிழல் சாலையில் உள்ள தனியார் டிஜிட்டில் நிறுவனத்தில் எடிட்டிங் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்டார். மழையின் காரணமாக குடையைப் பிடித்துக் கொண்டு மேற்குமாம்பலம் லேக் வியூ சாலையில் ஒரு அடி அளவிற்கு தேங்கியிருந்த தண்ணீரில் மெதுவாக நடந்த படி குடையை பிடித்துக் கொண்டு செல்போன் பேசியபடி சென்றார். திடீரென மணிகண்டன் சம்பவ இடத்தில் திடீரென செல்லை போட்டுவிட்டு கீழே விழுந்து துடித்து இறந்துள்ளார். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது ஒரு அடி ஆழ மழை நீரில் கிடந்த கைபேசியை கைப்பற்றினர். மணிகண்டன் செல்போன் கருகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் உயிரிழந்தார். மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *