செய்திகள்

சென்னையில் ஒரே கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை, செப். 16–

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1 ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை கடுமையாக பின்பற்றப்படுகின்றன. எனினும், சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகிறது.

13 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மாணவர்கள் அனைவருமே விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் என்றும் அண்மையில் சொந்த ஊர் சென்று திரும்பிய மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்பில் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த கல்லூரியில் கேரளாவில் இருந்து வந்து தங்கிப்படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 46 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *