சென்னை. செப்.11
சிம்ஸ் மருந்தகம் நகரம் முழுவதும் உள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹலோ டாக்டர் என்னும் திட்டத்தை துவக்கி உள்ளது. இந்த சேவை தனிநபர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப தங்கள் இருப்பிடத்தில் அல்லது தொலை தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனகள் பெறமுடியும். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவமனை செல்லும் திறன் இல்லதவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க சிறந்த திட்டமாக இருக்கும்.
இதனால் நோயாளிகள் ஹலோ டாக்டர் மூலம் சிம்ஸ் மருத்துவமனையில் எல்லா துறை சார்ந்த நிபுணர்களுடன் சந்திப்பை திட்டமிடலாம். ஒவ்வொரு மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்தும் 15 கி.மீ சுற்றவளவு வரை இந்த சேவையை அணுகலாம்.
சிம்ஸ் மருத்துமனை மருத்துவ சேவைகள் மேம்படுத்தும் பொருட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் பல்வேறு நவீன மருத்துவ செயல்முறைகளை அளித்துவருகிறது. அதில் ஒன்று சென்னை வடபழனியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட சிம்ஸ் மருந்தகம். மக்களிடையே இதற்கான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் இதை விரிவுப்படுத்தும் நிலையில் இன்னும் 9 இடங்களில் சிம்ஸ் மருந்தகம் தொடங்கி வைக்கிறது. இதை அரசு கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ள இந்த சிம்ஸ் மருந்தகம் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பணியாற்றும் பிரதிநிதிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் ஆலந்தூரில் அமைந்துள்ள பிரத்யேக சிம்ஸ் மருந்தகம் வருடத்தில் 365 நாட்களும் 24 மணிநேரமும் இயங்கும். இந்த திட்டத்தின் மூலம் நகரத்தின் உளகட்டமைப்பு மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சேவைகள் இரண்டும் இணைந்து அனைத்து முக்கிய மருந்துகளும் கிடைக்கும் வகையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதம் மருத்துவர்களுடன்
ஆலோசனை
சிம்ஸ் மருந்தகத்தின் திட்டத்துன் ஒரு பகுதியாக 2024–ம் ஆண்டு செப்டம்பர் 9–ம் தேதி முதல் அக்டோபர் 9 –ம் தேதி வரை ஒரு மாதம் வீட்டிலிருந்தே மருத்துவர்களுடன் ஆலோசனை பெறுவதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. 044–-2001 2001 ஹலோ டாக்டர் என்று அழைக்கப்படும் இந்த சேவை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் நேரடி சந்திப்பின் மூலம் மட்டுமே இதை பெறவும் முடியும்.
இந்த ஹலோ டாக்டர் சேவையானது சென்னை நகரின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்யும். சிம்ஸ் மருந்தகங்கள் அமைந்துள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலுள்ள சுற்றுப்புறங்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 10 சிறப்பு வாகனங்களும் தயார்படுத்தியுள்ளது.
இது குறித்து ரவிபச்சமுத்து கூறியதாவது:–
சிம்ஸ் மருந்தகம்
அமைய உள்ள இடங்கள்
சென்னையில் சிம்ஸ் மருந்தகங்கள் தொடங்கவிருக்கும் இடங்கள். செயல்முறையில் இருக்கும் வடபழனி, ஆலந்தூர், எக்மோர், சென்னை சென்ட்ரல், சிஎம்பிடி, கோயம்பேடு, ஹைகோர்ட், திருமங்கலம், அரசு எஸ்டேட் மற்றும் ஆயிரம் விளக்கு. மெட்ரோ ரயில் நிலையங்களில் சிம்ஸ் மருந்தகம் அமைப்பதன் மூலம் பணியாளர்கள் மற்றும் பயணிகள் எளிதில் மருத்துவ சேவைககளையும் மற்றும் மருந்துகளையும் பெறமுடியும்.
சிம்ஸ் மருந்தகம் வழங்கும் மருத்துவ சேவைகள்
1. ஹலோ டயக்னாஸிடிக் : மருத்துவ பரிசோதனைகள் வீட்டில் வந்து செய்வதன் மூலம் நோயாளிகள், குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் சுமையை குறைக்கிறது.
2. ஹலோ பிசியோ வலி மேலாண்மை மற்றும் நோயிலிருந்து மீட்டெடுக்கும் மறுவாழ்வு சிகிச்சையான பிசியோதெரபியை வீட்டில் செய்யும் சேவை
3. ஹலோ பார்மஸி மருந்துகள் தாமதமில்லாமல் கிடைக்கவும் எளிதில் பெறவும் வசதியாக ஹோம் டெலிவரி சேவைகள்
இலவச பிக் -அப்
ட்ராப் ஏற்பாடு
4. நோயாளிகளை வசதியாக அழைத்து செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வாகனம்
5. மருத்துவமனையில் இலவச பிக் -அப் மற்றும் ட்ராப்- ஆஃப் : முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் இலவசமாக இந்த சேவை கிடைக்கும்.
6. பிரச்சனைகள் முன்கூட்டியே கண்டறிய வீட்டில் பல் பராமரிப்பு சேவைகள் வழங்குவது.
7. வீட்டு ஆலோசனை சேவைகள் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நிவர்த்தி செய்வதற்கு வீட்டு ஆலோசனை சேவைகள் வழங்குவது
8. வீட்டு ஆரோக்கிய சேவைகள் : ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான வீட்டு சேவைகள்
9. சிகிச்சைக்கு பிந்தைய நோயாளிகள் கவனிப்பு : மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு பிரத்யேகமாக நோயாளிகளின் விருப்பத்தை பொறுத்து வீட்டுக்கு சென்று தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சேவைகள்
10. குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவை: நோய்களின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சிகிச்சை அளிக்க முடியாத நோயாளிகளுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்கும் சேவை.
மூத்த மருத்துவர்களுடன்
தொலைபேசியில் சேவை
11. மூத்த மருத்துவ நிபுணர்களுடன் தொலைபேசி சேவை: நிபுணர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக தொலைபேசியில் அணுகும் சேவை
12. முதியோர் பராமரிப்பு சேவைகள் : வயதானவர்களின் தனிப்பட்ட சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வழங்கப்படும் சேவை
இவ்வாறு அவர் கூறினார்.