செய்திகள்

சென்னையில் இன்று 102 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை

சென்னை, அக். 14–

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.10-ஐ தாண்டியது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.10-ஐ தாண்டி உள்ளது. லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.97.93 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.79.11 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.93.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.75 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.40 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.105.43 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.63 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *