செய்திகள்

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, மே 18–

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 10–ந்தேதி அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை அதிகரித்தது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டுவருவது நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *