செய்திகள்

சென்னையில் இன்று காலை நிலநடுக்கம்

புதுடெல்லி, பிப். 12

சென்னைக்கு வட கிழக்கே வங்கக் கடல் பகுதியில் இன்று காலை சரியாக 7:02 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, ஆந்திரா மாநிலங்களில் சில பகுதி்களில் நில அதிர்வு (நிலநடுக்கம்) உணரப்பட்டது. பெரும் சேதம் ஏதும் இல்லை.

சென்னையிலிரந்து 609 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் எற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து 400 கிமீ தொலைவில் கடலில் நிலநடுக்கம் நடந்ததாக அமெரிக்கப் புவியியல் மையம் அறிவித்துள்ளது.

நில அதிர்வால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள், நில அதிர்வை உணர்ந்ததாகவும், 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *