சென்னை, ஏப். 15–
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஒரு ஆண்டு காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 20 நாட்களாக தங்கம் விலை ‘கிடுகிடு’வென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்து, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து. தொடர்ந்து ஏறுமுகத்துடன் தங்கம் விலை இருந்து வந்தது.
சவரனுக்கு ரூ.520 குறைவு
நேற்றும் சவரனுக்கு ரூ.600 வரை அதிகரித்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 520 குறைந்துள்ளது. இதையடுத்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,790 க்கும், ஒரு சவரன் ரூ. 54, 320 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 6, 790க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளை, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ. 89.50க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.89,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.