சென்னை, செப். 18–
சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் இன்று அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணா வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை செளகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் தேதி சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
![]()





