செய்திகள்

சென்னையிலிருந்து வெளியூருக்கு பேருந்துகளில் 1.29 லட்சம் பேர் பயணம்

சென்னை, செப். 10–

சென்னையிலிருந்து, வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாட்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

1.29 லட்சம் பேர் பயணம்

அதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக அளவில் கூடியதால், அங்கு கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சிறப்புப் பேருந்துகள் என 2,642 பேருந்துகள் இயக்கப்பட்டு நிலையில் 1.29 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *