சென்னை, அக். 15–
சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் புறப்பட வேண்டிய 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான விமான பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.
கனமழை மற்றும் போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையிலிருந்து பெங்களூரு, அந்தமான், புதுடில்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.