செய்திகள்

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

Makkal Kural Official

சென்னை, ஜன.9–

சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நாளை (10–ந் தேதி) சனிக்கிழமை அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *