ஆர் முத்துக்குமார்
சென்னையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் நிலையம், இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த நிலையம், கோவை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தொடர்ந்து போக்குவரத்து வழங்குகிறது. இந்த அடர்த்தியான போக்குவரத்து நிலையத்தில் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த லக்கேஜ் பாதுகாப்பு சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் லாக்கர் அறை வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது.
இந்த டிஜிட்டல் லாக்கர் அறை வசதி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய ஏற்பாடு , அதைச் சரிவர உபயோகித்து மகிழ பயணிகள் தயாராகி விட்டனர்.
சர்வதேச விமான நிலையங்களில் உள்ள நவீன வசதி நமது ரயில் நிலையத்திற்கு வந்து இருப்பது சென்னைக்கு புதுப் பெருமை ஆகும்,
சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பொதுவாக தங்களின் லக்கேஜ்களை எங்கு சென்றாலும் தூக்கிச் செல்ல வேண்டிய அவசரநிலைக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணம் செய்யும் குடும்பங்கள் இம்மேலொளி பிரச்சினையை அதிகமாக சந்தித்தனர். இதற்கு இப்போது புதிய டிஜிட்டல் லாக்கர் அறைகள் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
பிளாட்பார்ம் 2-ல் அமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் லாக்கர் அறையில் மூன்று விதமான லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுத்தரம்,பெரியது,மிகப்பெரியது.
இந்த லாக்கர்களின் பயன்பாட்டுக்கு காலநேரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் அளவிற்கு ஏற்ப கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகை லாக்கர்களில் பொருட்களை வைக்க 3 மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணம் ஆகும். 6 மணி நேரத்துக்கு ரூ.60 ம் 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணம் எவ்வளவு பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.50, 6 மணி நேரத்துக்கு ரூ.80, 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மிகப்பெரிய லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60, 6 மணி நேரத்துக்கு ரூ.100, 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஒரு நாளைக்கு டிஜிட்டர் லாக்கர் பெட்டியை பயன்படுத்த நடுத்தர பெட்டிகளுக்கு ரூ.120, பெரிய பெட்டிகளுக்கு ரூ.160, மிகப்பெரிய பெட்டிகளுக்கு ரூ.200 கட்டணமாகும். மொத்தம் 84 லாக்கர் பெட்டிகள் இங்கு உள்ளது. சன் மோட்டர் பார்ட்ஸ் என்ற ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 84 லாக்கர்கள் உள்ளன. இங்கு நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன.
மொத்தமாக 84 லாக்கர்கள் இந்த வசதியில் செயல்படுகின்றன. பயணிகள், கியூ-ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் இவ்வசதியைத் தங்களின் செல்போன் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும். தேவையான லாக்கரை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தியதும் பயனர்கள் தங்கள் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்கலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் இதர தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரம் கழித்தே அடுத்த ரயிலை பிடித்து செல்வதை காண முடிகிறது. அப்படியான பயணிகள் லக்கேஜ்களை எங்கு சென்றாலும் கைகளில் தூக்கி கொண்டு இனி அலைய வேண்டியது இல்லை!
இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட நிதி ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வருவாய் ஈட்டலில் 3-வது இடத்தை பிடித்து முன்னிலையில் திகழ்கிறது. இந்திய ரயில்வேயின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான இந்த ரெயில் நிலையத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பாரம்பரியம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.