செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 10–

ஜாமீன் வழங்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காதது குறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பலமுறை ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு இதுவரை மூன்று முறை ஒத்திவைத்துள்ளதாகவும், விரைந்து ஜாமீன் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று நடந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கால அவகாசம் கோரியதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. நாளை மறுநாள் ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *