ஆவடி, ஜூன் 6–
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவுபடியும், கூடுதல் ஆணையாளர் கே.பவானீஸ்வரி மேற்பார்வையில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவி உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலிசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா என்னும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்குன்றம் பஸ் ஸ்டேண்ட் அருகில் சந்தேகம்படியாக நடந்து வந்த முகுந்தன் (47) என்பவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அதை கைப்பற்றி அவரை கைது செய்தனர். அவர் மீது செங்குன்றம் மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
![]()





