செய்திகள்

செங்கல் சூளை அதிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி பணம் பறிக்க முயற்சி: தடுக்க முயன்ற நண்பர் படுகாயம்

விழுப்புரம், ஏப். 15–

விழுப்புரம் அருகே செங்கல் சூளை அதிபர் மீது மர்ம ஆசாமிகள் 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை தடுக்க வந்த நண்பர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் எடுத்து பூத்துறை என்ற கிராமத்தை சேர்ந்த உதயகுமார் வயது 37, இவர் பூத்துறை அருகே செங்கல் சூளை வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளை சம்பந்தமாக வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு புதுச்சேரியிலிருந்து காசிபாளையம் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூத்துறை அருகே முந்திரி தோப்பில் எதிர்பாராத விதமாக அவரை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் உதயகுமாரிடம் வைத்திருக்கும் பணத்தை கொடுக்குமாறு கூறினார்கள். உடனே உதயகுமார் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அருகிலுள்ள முந்திரி தோப்பில் ஓடினார். அங்கிருந்தே உதயகுமார் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். இத்தகவலறிந்து உதயகுமாரின் நண்பர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர் .

அப்போது உதயகுமாரை பின் தொடர்ந்த 2 நபர்கள் தான் வைத்திருந்த இரண்டு நாட்டு வெடி குண்டுகளை அவர் மீது வீசினார்கள். அந்த நாட்டு வெடிகுண்டு உதயகுமாரின் நண்பர் மணிபாலன் மீது விழுந்து வெடித்தது. இதில் மணிபாலன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 2 பேரும் தப்பி ஓடினார்கள். அதைத் தொடர்ந்து படுகயாம் அடைந்த மணிபாலன் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் கிடைத்ததும் வாணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்னை விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய்கள் வரவேற்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொழில் போட்டியாக நடந்ததா அல்லது முன்விரோதத்தில் நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் வானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *