செய்திகள்

செங்கல்பட்டு தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு, மார்ச் 20 –

செங்கல்பட்டு தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் எஸ். கெளஸ்பாஷா தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் ஆப்பூர், வெங்கடாபுரம், குருவன்மேடு, பாலூர், திம்மாவரம், செட்டி புண்ணியம் ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரரதீய ஜனதா கட்சியின் மாநில ஊடக செயலாளர் ராஜதேவன், பாலூர் வழக்கறிஞர் எஸ்.ஏ.சுதேஷ் ஆனந்த், காட்டாங்குளத்தூர் கனி என்கிற கணேஷ் மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *