செய்திகள்

செங்கல்பட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் பலி

செங்கல்பட்டு, மே 5

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 13 நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 1,500ரை கடந்து வரும் நிலையில், அங்குள்ள  அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில்  அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் 13 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு கலெக்டர்.அ.ஜான் லூயிஸ் கொரோனா சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தப் போது, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23,000 லிட்டர் ஆக்சிஜன் இருப்பில் உள்ளதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *