சினிமா

சூர்யா தந்த ரூ.30 லட்சம் நன்கொடையில் 1300 தயாரிப்பாளர்களுக்கு ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியம்

சென்னை, செப்.20

கலைப்புலி எஸ்.தாணுவின் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஓ.டி.டி. மூலமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

அந்த தொகை தற்போது கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர், கே.முரளிதரன், கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரனிடம் (தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர்) ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்தப் பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள். இதனை அடுத்து சூர்யாவுக்கு நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *