காளப்பட்டி அரசுபள்ளி மாணவர் குணசேகர் கண்டுபிடிப்பு
அறிவியல் அறிவோம்
காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் குணசேகர், சூரிய சக்தியால் இயங்கும் பஸ்சை செயல்விளக்கம் செய்து காண்பித்து அசத்தினார். இந்த பஸ்சை சூரிய ஒளி கிடைக்காத நேரத்திலும் குறிப்பாக இரவு மற்றும் மழைக்காலங்களிலும் இயக்கலாம். இதில் ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்தையும் இவர் விளக்கிக் காட்டினார்.
இதேபோல் கோவை இன்பன்ட் ஜீசஸ் கான்வென்ட் மாணவி செலின் ஹில்டா, சூரிய அடுப்பு தொழில்நுட்பத்தில் ஆரோக்கிய உணவு தயாரிப்பது குறித்து விளக்கினார்.சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் மரபுசாரா எரிசக்தி தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி, இவர்கள் தயாரித்துள்ள அற்புத படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.