வாழ்வியல்

சூப்பர் கம்ப்யூட்டிங் விநியோக அமைப்புச் சட்டகம் நிறுவ மத்திய அரசு திட்டம்

70 க்கும் அதிகமான அதிவேகச் செயல்பாட்டு கணிப்பொறி அமைப்புகளுடன் ஒரு விரிவான சூப்பர் கம்ப்யூட்டிங் விநியோக அமைப்புச் சட்டகம் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இது தேசிய சூப்பர் கம்யூட்டிங் பணித் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும். இந்த இயந்திரத்தின் நோக்கமானது இந்தியாவை கம்யூட்டிங் மற்றும் பெரும்தரவு பகுப்பாய்வில் முன்னணி இடத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்வதே ஆகும். இந்தப் பணித்திட்டம் ரூ.4,500 கோடி செலவில் மார்ச் 2015 ல் அனுமதிக்கப்பட்டது.

இம்ப்பாக்டிவ் ஆய்வு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் (இம்ப்ரிண்ட்) திட்டத்துடன் சேர்ந்த செயலானது அறிவியல் தொழில் நுட்பத் துறையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒன்றிணைய வைத்துள்ளது. உடல்நலப் பராமரிப்பு, தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம், எரிசக்தி, நிலைத்த குடியிருப்பு, நானோ தொழில்நுட்பம், நீர் ஆதாரங்கள் மற்றும் நதி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், அபாயத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுதல் தொடர்பான பாதிப்பு குறைப்பு, தகவமைப்பு போன்ற மிக முக்கியமான சமூகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த தேவைகளை எதிர்கொள்ள இந்த ஒன்றிணைப்பு உதவும்.

ரெயில்வே அமைச்சகத்துடன் சேர்ந்து கூட்டாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையானது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துதல், மாசு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள், மாற்று எரிபொருட்கள், டீசல் இழுவைகளில் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *