வாழ்வியல்

சுவாச நோய்களை குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியைத் தரும் கொழுஞ்சிச் செடியின் நன்மைகள்!

வயல் வெளிகளில் வளரும் கொட்டைக் கரந்தை போன்ற கற்ப மூலிகைகளை அவற்றின் பலன்களை அறியாமல், பயிர்களை அழிக்க வந்த களைச்செடிகள் என்று விவசாயிகள் வெட்டியோ, இரசாயனங்கள் தெளித்தோ அழிக்கிறார்கள். இருந்தபோதிலும் ஒரு செடியை மட்டும், நெற்பயிர் விளைவதற்கு முன்னால் வயல்களில் வளர்க்கிறார்கள்.

இது என்ன விந்தை? அப்படி என்ன பலன்கள் இருக்கிறது அந்தச் செடியில்? கொழுஞ்சி என்பதுதான் அந்தச் செடி.

கொழுஞ்சி விவசாயிகளின் தோழனாகத் திகழ்கிறது. வயல்களில், நெல்மணி நாற்றுகளை நாடும் சமயத்திற்கு ஓரிரு வாரங்கள் முன்னர் அந்தச் செடிகளை விதைகள் மூலம் நட்டு, வயலில் வளர்த்து வருவார்கள். மழை பொழிய ஆரம்பித்ததும், வளர்ந்து சில நாட்களே ஆன கொழுஞ்சி செடிகளை, சேற்றில் கலந்து மண்ணில் பரவும் வகையில் வயலை உழுது விடுவார்கள்.

அதன் பின்னரே வயலில், நெல் நாற்றுக்களை நடுவார்கள். வயலில் வளர்த்து, வயல் மண்ணிலேயே கலந்த கொழுஞ்சி தான், அந்த நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகத் திகழும். சாம்பல், மணிச்சத்து மற்றும் தழைச் சத்து மிக்க, இந்த கொழுஞ்சி உரம், நெற்கதிர்களை விரைவில் செழித்து வளர வைத்து, நல்ல விளைச்சலை உண்டாக்கும் தன்மை மிக்கதாக விளங்குவதால்தான், கொழுஞ்சி செடிகளை வயலில் வளர்த்து இயற்கை உரமாக்குகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *