செய்திகள் வாழ்வியல்

சுவாச குழாய் அடைப்பை போக்கி, சைனஸ் , மூக்கடைப்பை நீக்கும் மிளகு

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


மிளகு சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க அதிக அளவு உதவுகின்றது. எந்த விதமான சுகப் பிரச்சனைகளையும் எளிதாக போக்க மிளகு உதவும். இந்த வகையில் இதில் இருக்கும் சளி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எளிதாக ஆஸ்துமா அறிகுறிகளை குணப்படுத்த உதவும்.

மேலும் சுவாச குழாயை தெளிவுபடுத்தி எளிதாக சுவாசிக்கவும் உதவும்.

நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது மிளகின் ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. இதனால் நோய் பரவுவதும் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகின்றது.

மேலும் தமனிகள் சுவற்றில் இருந்து கொழுப்பை அகற்றி சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

மிளகு உட்கொண்டால் சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும்.

மேலும் உடலில் இருக்கும் அதிக அளவிலான நீரையும் வெளியேற்ற உதவும். மேலும் சிறுநீர் மூலமாக தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்தால் அதனையும் வெளியேற்ற உதவும். இதனால் தமனிகளும் சுத்தமாகின்றது.

எந்த வகையிலாவது உணவோடு மிளகு,மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உள்உறுப்புகளில் உள்ள நோய்த்தொற்றுகள் , கழிவுகள் வேர்வை ,சிறுநீர் ஆக வெளியேறிவிடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *