செய்திகள்

சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபட்ட 100 பேருக்கு மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலனின் சாதனை விருது; ‘தாய்’ டிரஸ்ட் புஷ்பராஜுக்கு மாமனிதர் விருது

சென்னை, ஏப். 20

தமிழகத்தின் முன்னணி சுற்றுலா வழிகாட்டி இதழ் ஆன மதுரா வெல்கம் சார்பாக நான்காவது வருடமாக தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழா அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாடகி பி.சுசீலா கலந்து கொண்டு மதுரா சாதனை விருதுகளை வழங்கினார்.

மதுரா டிராவல் மனித நேய சேவைக்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்க பரிசுடன் மதுரா மாமனிதர் விருது வழங்கி வருகிறது.

கடந்த 9 வருட காலமாக வழங்கப்பட்டு வரும் இவ்விருது இந்த வருடம் ‘தாய்’ தொண்டு நிறுவன டிரஸ்டியான கே.ஜே.டி.புஷ்பராஜுக்கு வழங்கப்பட்டது. ஆய்குடி அமர் சேவா சங்கம் நிறுவனரான ராமகிருஷ்ணன் தலைமையில் மதுரா டிராவல் சர்வீஸ் தலைவர் வீ.கே.டி.பாலன் இவ்விருதினை வழங்கினார்.

வி.ஜி.பி.குரூப் சேர்மன் வி.ஜி.சந்தோசம், நர்த்தகி நடராஜ், எம்.சி.கவிதா சந்தைப்படுத்தல் மேலாளர் மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு துறை இயக்குனர் சிவராஜ் கல்பானா, ஓட்டல் சிவராஜ் ஹாலிடே இன் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், ஜென்னீஸ் அகாடமி இயக்குனர் பொன் இளங்கோ, ப்ரெஸ்ஸிலா, டி சொய்சா இன்ஸ்டிடியூட் ஏர்லைன்ஸ் அண்ட் டிராவல் ஏஜென்சி நிறுவனம், கல்வி உளவியல் நிபுணர் டாக்டர் சரண்யா டி.ஜெய்குமார் ஜோதி மயால் கவுரவ செயலாளர் நாயகம், தெற்கு பிராந்திய டிஏஏஐ தலைவர் கே.ஷாகுல் ஹமீத், ஜி.ரவிசந்திரன், எஸ்.அருள் லாசரன், அசோகா தலைவர் மெட்ராஸ் சுற்றுலா வழிகாட்டி சங்கம் பாலகிருஷ்ணன், சென்னை சுற்றுலா உரிமையாளர் சங்கம், தேவகி தியாகராஜன் செயற்குழு உறுப்பினர், இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி, ஆண்டனி லோபோ ஸ்பெயின் தூதர் பேராசிரியர் ஜே.ரங்கநாதன் மயான்மரின் தூதர் சுதிர் சுகுமாரன், பிராந்திய மேலாளர் எமிரேட்ஸ் குரானா நேகுன் பொது மேலாளர் தாய் ஏர்வேஸ், சையத் சாலமுடின் விற்பனை மேலாளர் வளைகுடா ஏர், அருண்குமார் மேலாளர் குவைத் ஏர்வேஸ், கீதா மேனன் பிராந்திய இயக்குனர் ஏர் மொரிஷியஸ், ராய் ஜோசப் மண்டல மேலாளர் ஏர் அரேபியா ஆகியோர் விருது வழங்கினர்.

மதுரா டிராவல்ஸ் துணை நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரன் பாலன் வரவேற்றார். அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கினார். 100க்கு மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *