செய்திகள்

சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘பசுமைக்கு செல்லுங்கள்’ திட்டம் : யூனியன் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம்

Spread the love

சென்னை, செப். 12

யூனியன் பாங்க் ஆப் இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி ‘கோ கிரீன்’ என்னும் ‘பசுமைக்கு செல்லுங்கள்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வங்கி மேற்கொண்டுள்ளது.

‘கோ கிரீன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக யூனியன் பாங்க் பவன் வளாகத்தில் மரங்கள் நடும் திட்டத்தை நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்கிரண் ராய், கள மேலாளர் லால் சிங் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை அலுவலக வளாகங்கள் மற்றும் வீடுகளில் நட்டு இயற்கையை போற்றி பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *