சிறுகதை

சுய முன்­னேற்றப் பேச்­சாளர்… | ராஜா செல்­ல­முத்­து

பெரு­மாளின் பேச்­சுக்கு கூடி­யி­ருக்கும் அரங்­கமே கைதட்டி ஆர்ப்­ப­ரிக்கும். அவரின் சுய முன்­னேற்றப் பேச்சு, எழுத்து என்றால் வாச­கர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் புதையல் போல, அவர் மேடையில் நின்று பேசும் பேச்சு ஒரு பிர­ள­யத்­தையே உரு­வாக்­கும்.

‘வெ­றுங்கை என்­பது மூடத்­தனம், பத்து விரல்­களே மூல­தனம்’ என்ற தாரா பார­தியின் கவி­தையைத் தாரக மந்­தி­ரமாய் சொல்வார். அவர் போகாத நாடுகள் இல்லை, பேசாத மேடைகள் இல்லை. அத்­தனைப் பேச்சும் அச்சு வெல்லம்.

‘தோல்வி தான் வெற்­றியின் முதல் படி வெற்றி சந்­தோ­சத்தின் திறவு கோல், உழைப்பு தான் ஒருவனை உயர்த்­தும் முயற்சி தான் ஒரு­வனை உரு­வாக்­கும்’ என்று அவர் மேடையில் பேசும் பேச்­சுக்கு, கைதட்டி ஆர­வாரம் செய்யும் ஆட்­களின் உற்­சாகம் குறை நெடு நேர­மாகும். அப்படியொ­ரு பாசி­ட்டிவ் எனர்ஜி இருக்கும் அவரின் பேச்­சில்.

ஒவ்­வொரு வார்த்­தை­களின் இடை­வெளியில், சுய முன்­னேற்றச் சொற்கள் வைரங்­க­ளாக, வரிந்து கட்டிக் கொண்டு முன்­னுக்கு வந்து நிற்கும். எத்­த­னையோ மேடை­களில் முழங்­கிய பெருமாள் இன்று மதுரை மாந­கரில் பேச ஆரம்­பித்தார். அவர் மேடைக்கு வரு­வ­தற்கு முன்பே மக்­களின் ஆர­வாரம் விண்ணை முட்­டி­யது. இவரின் பேச்சைக் கேட்டால் எப்­ப­டியும் முன்­னுக்கு வந்து விடலாம் என்ற முனைப்­பி­லேயே ஆவல் மிகு­தியில் உட்­கார்ந்­தி­ருந்­தனர் நிறைய ஆட்­கள்.

‘தன்­னம்­பிக்­கையின் நங்­கூரம், உழைப்பின் உற்­சாகம், சுய­முன்­னேற்ற பேச்சு பேரொளி என்­ற அடை­மொழி வாச­கங்கள் அவர் பேச இரு­க்கும் அரங்கை அழ­காக வைத்­தி­ருந்­த­து.

ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் குறை­யக்­கு­றைய பெருமாள், மேடையின் மீது பளிச்­சென்­றுத் தோன்­றி­னார்.

அவர் அணிந்­தி­ரு­ந்த உடை­யும் பார்­வையும் ஒரு­சேர இருந்­தது. தீட்­சண்யம் கண்­களில் தீக்­குச்சி கொளுத்­தி­யது. அவரைப் பார்த்­த­துமே வெற்­றியின் வெளிச்சம் தங்­களின் பக்­கமே விழுந்­த­தென விரும்­பி­யிருந்­தனர், உட்­கார்ந்­தி­ருந்த ஆட்­கள்.

அன்­பான நண்­பர்­க­ளே’ என்று உதடு திறந்து அவர் வார்த்­தை­களை உதிர்த்த போது, கைத்­தட்­டல்­களின் ஒலி ஒவ்­வொ­ரு­வரின் காது­க­ளையும் அடைத்து நிறைத்­தது. அந்த அர­வ­ணைப்பு அங்கீ­கா­ரம் பெரு­மாளை பெரு­மிதம் கொள்ளச் செய்­தது. தன் இடது கையி­லி­ருந்த மைக்கை வலது கைக்கு மாற்­றி­னார்.

கூடி­யி­ருந்த கூட்­டத்தின் கடைசி வரை கண்­களைக் கொண்டுச் சென்றார். தூரத்தில் பார்த்த பார்­வையில் குவிந்­தி­ருந்­தனர் மக்கள். கடை­சி­வரை கவ­ன­மாகப் பார்த்­ததில், தன் பேச்சைக் கேட்க இவ்வள­வு நபர்­களா? என்ற ஆச்­சர்­யத்தில் அவர் விழி­களில் திரண்­டன நீர்த்­து­ளி­கள்.

‘நண்­பர்­களே, வாழ்க்­கையில் எப்­பி­டி­யா­வது ஜெயிக்க வேண்­டு­மென்ற முனைப்பில் இருப்­ப­வர்­களே இதோ உங்­க­ளுக்கு ஒரு டிப்ஸ், இதைத் தெரிந்து கொண்டால் வெற்றி உங்கள் உள்­ளங்­கயைில் உருளும்’ என்று பெருமாள் சொன்­ன­போது சோர்ந்து போய் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்கள் கூட, கொஞ்சம் நிமிர்ந்து உட்­கார்ந்­த­னர். வாழ்க்­கையில் எப்­பி­டி­யா­வது ஜெயிக்­க­ணும்னு உழைச்­சிட்டு இருக்­கிற நீங்க முயற்சி செஞ்சும் முன்­னேற முடி­ய­லை­யேன்னு முணங்­கிக்­கிட்டு இருக்­கிற நீங்க. ஒரு ரக­சி­யத்தை தெரி­ஞ்­சுக்­கோங்க எத்­தனை தடவ விழுந்­தாலும் எழுந்து நிக்­கணும். எத்­தனை தடவ தோல்­வி­ய­டைஞ்­சாலும் முயற்­சிய, நம்பிக்­கையை இழக்கக் கூடாது. தொடர்ந்து முயற்சி செஞ்­சிட்டே இருக்­கணும். உளி உடைக்க உடை­க்கத் தான் கல்­லுல ஒளிஞ்சிட்டு இருக்­கிற சிலை வெளிய வருது. அது மாதிரி தான் ஒங்­க­ளுக்­குள்­ள இருக்­கிற வெற்றியின் வெளிச்சம் வெளிய வரும்.

ஒரு கதவு அடைச்­சி­ருச்­சேன்­னு நெனைச்சு வருத்தப் படா­தீங்க. இன்­னொரு கதவு தானா தெறக்கும். அப்­பி­டி­யில்­லையா கதவ ஒடைச்­சிட்டு வெளிய வாங்க’ நம்­பிக்­கை­யில தான் வாழ்க்கை நகரும்,

சோம்பிக் கெடந்­தீங்­கன்னா, ஒங்களால ஒரு சிறு துரும்பக் கூட நகர்த்த முடி­யாது. நம்­பிக்­கை­யோட இருங்க. வாழ்க்­கை­யோட வட்டம் ரொம்ப பெருசு. நீங்க ஏன் ஒங்­கள சுத்தி சின்ன வட்டம் போட்டு சிறைக்­குள்ள இருக்­கீங்க – ஒடச்­சிட்டு வெளிய வாங்க’ வெற்றி உங்க உள்­ளங்­கையில் வந்து உட்­காரும்’ என்று பேசினார் பெருமாள்.

அவர் பேசப் பேச சோர்ந்து போய் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்­களின் வேகம் மேலும் மேலும் கூடி­ய­து.

அங்­கி­ருப்­ப­வர்கள் அத்­தனை பேரும் அன்றே வெற்றி பெற்­ற­தா­கவே நினைத்துக் கொண்­டார்­கள்.

சுய­முன்­னேற்றச் சொற்கள் உட்­கார்ந்­தி­ருந்­த­வர்­களைச் சுற்றிச் சுற்றி வந்­தது. பெரு­மாளின் பேச்சு எல்­லோர் உயிரில் கலந்து உணர்­வு­களில் ஊறி­யது. மேடை முழு­வதும் மேன்மைச் சொற்­களைத் தூவி விட்டு, மேடையை விட்டுக் கீழே இறங்­கினார் பெரு­மாள். அவரைச் சுற்றி ஈக்­களை மொய்ப்­பது போல் ஆட்­கள் மொய்த்­த­னர்.

‘ஐயா, சுய முன்­னேற்­றத்த பத்தி இவ்­வ­ளவு அழகா பேசு­றீங்க. நல்ல நல்ல புத்­த­கங்­களை எழுதியி­ருக்­கீங்க. எப்­பிடி ஒங்­களால மட்டும் முடி­யுது. ஒங்­க­ளோட எழுத்­துக்கள் என்­னைய எங்­கயோ கொண்டு போயி­ருக்கு’ ரொம்ப நன்­றிங்க. என்றார் ஒரு பெரி­யவர். சிலர் ஓடிப்போய் பெரு­மாளின் காலில் விழுந்­த­னர்.

‘ஐயா நீங்க தெய்வம்; எழுத்துக் கடவுள்’ இப்­படி என்­னென்­னவோ பேசினர். அது அத்­த­னயைும் கேட்டுக் கொண்­டி­ருந்த பெருமாள் கட­க­ட­வெனச் சிரித்­தார்.

ஐயா, ஏன் இப்­பிடி சிரிக்­கி­றீங்­க?

‘ஒண்­ணு­மில்ல… ஒண்­ணு­மில்ல’ என்று தன்னைத் தானே சமா­தானப் படுத்திக் கொண்டு மீண்டும் மேடை ஏறினார். இங்க பாருங்க, உங்­க­ளுக்­கெல்லாம் ஒரு ரக­சியம் சொல்லப் போறேன்’ என்­ற­வரின் கண்­களில் நீர் திரண்­ட­து.

இப்ப நீங்க பாத்­திட்டு இருக்­கிற இந்த பெருமாள், இரு­பது வரு­சத்­துக்கு முன்­னால தன்­னோட லட்­சி­யத்­தில தோத்துப் போனவன். தோல்­வி­யில துவண்டு கிடந்­தவன் தான் நான், என்­னோட லட்­சி­யத்­தில என்­னால ஜெயிக்க முடி­யல. ஏன் ஜெயிக்க முடி­ய­லன்னு ஆராய்ச்சி பண்­ணுனேன். இது இது தான் தடை­களா இருக்­குன்னு கண்­டு­பி­டிச்சேன்.

நான் என்­னோட லட்­சி­யத்­தில ஜெயிச்­சனோ இல்­லையோ? மத்­த­வங்க யாரும் தோக்­கக் கூடா­துன்­னு நெனைக்­கிறேன். அதத்தான் பேசிட்டு இருக்கேன்’ இப்ப அதுவே என்­னோட தொழிலா போச்சு. சுய முன்­னேற்ற பேச்சு, எழுத்து இப்­பிடி நான் நெறையா எழு­து­னாலும் பேசி­னாலும் என்­னோட லட்­சி­யத்­தில நான் ஜெயிக்­கல’ என்று பெருமாள் சொன்ன போது அத்­தனை பேருக்கும் ஆச்­சர்யம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *