செய்திகள்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபாங்கர் தத்தா பதவி ஏற்பு

புதுடெல்லி, டிச.12-

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபாங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார்.

மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மத்திய அரசு அறிவித்தது. இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது.

தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார்.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை பதவி ஏற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *