செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

இனி முழு நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் இயங்கும்

புதுடெல்லி, பிப்.10–

சுப்ரீம் கோர்ட்டிற்கு மேலும் 2 நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டவுடன் சுப்ரீம் கோட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும். முழு எண்ணிக்கையுடன் இயங்கும்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில்,” இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் படி, ஜனாதிபதி பின்வரும் 2 ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக நியமித்துள்ளார். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவர்கள் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அரவிந்த் குமார்” என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். முன்பு 27 நீதிபதிகளே இருந்தனர். கடந்த 6–ந்தேதி 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்ற நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

இதையடுத்து மீதமுள்ள 2 இடங்களுக்கும் 2 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி, இன்று 2 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் இனி முழு நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *