செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்

Makkal Kural Official

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

வாஷிங்டன், செப். 30–

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் நேற்று மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அதற்கு அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விண்வெளி மையத்தில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் முனைப்பில் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வேதேச விண்வெளி மையத்தை நேற்று மாலை அடைந்தது.

நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் புளோரிடாவின் கேப் கானவெரலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டனர். இந்த விண்காலம் நேற்று மாலை 5.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *