செய்திகள்

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் டெபாசிட் ரூ.1605 கோடியாக உயர்வு

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் டெபாசிட் ரூ.1605 கோடியாக உயர்வு:

நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன் துரைசாமி தகவல்

சிறு நகரங்களில் வீட்டு வசதி திட்டம் வளரும்

 

சென்னை, மே. 22

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் அங்கமான வீட்டு வசதி கடன் வழங்கும் சுந்தரம் ஹோம் பைனான்ஸ் டெபாசிட், முந்தைய ஆண்டை விட 35% அதிகமாகி ரூ.1605 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் ரூ.218 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.145 கோடியாக இருந்தது. இது ரூ.2113 கோடிக்கு கடன் வழங்கியது. முந்தைய ஆண்டில் இது 2449 கோடியாக இருந்தது என்று நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன் துரைசாமி தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் புதிய டெபாசிட் வந்துள்ளது

ரியல் எஸ்டேட் துறை கொரோனா வைரஸ் பாதிப்பால் எந்த அளவுக்கு பாதிப்படையும் என இப்போது தீர்மானிக்க முடியாது. குறுகிய கால வீட்டு வசதிக் கடன் திட்டத்துக்கு இனி வரவேற்பு இருக்கும் என்றார்.

நீண்ட கால அடிப்படையில் வீட்டு வசதி கடன் வளரும். வீட்டு வசதி கடன் துறையும் வளரும். நகரங்களை விட சிறு நகரங்களில் வீட்டு வசதி முதலீடு உயரும். சுந்தரம் ஹோம் பைனான்ஸ் 4 வது காலாண்டில் (ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை) ரூ. 82 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. நிகர லாபமாக ரூ.26 கோடி சம்பாதித்துள்ளது என்றார் அவர்.

மத்திய அரசின் ரிசர்வ் வங்கி பொருளாதார தேக்க நிலைக்கு புத்துணர்வு கொடுக்க அளித்த சலுகைகள் வரவேற்கத்தக்கது. குறிப்பாக வீட்டு வசதி பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய வீட்டு வசதி வங்கியிடம் மறு கடன் தொகை பெறும் வசதி மிக உதவியாக இருக்கும். சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நாடு முழுவதும் 115 கிளைகளுடன், வீட்டு வசதி கடன் துறையில் தலைசிறந்து விளங்குகிறது என்றும் லட்சுமி நாராயணன் துரைசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *