செய்திகள்

சுந்தரம் பைனான்ஸ் ரூ.166 கோடி லாபம்: நிர்வாக இயக்குனர் டி.டி. சீனிவாசராகவன் தகவல்

சென்னை, ஆக.11

பாரம்பரிய டி.வி.எஸ். குரூப் நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் லாபம் 6% உயர்ந்து ரூ.166 கோடியானது. கடந்த ஆண்டில் இது 157 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலம் வருவாய் ரூ.948 கோடியாக அதிகரித்தது. இதன் டெபாசிட் ரூ.3700 கோடியாக உயர்ந்தது. இது நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 29 ஆயிரத்த 580. விவசாய துறையில் பருவ நிலை சிறப்பாக உள்ளதால், கிராம பொருளாதாரம் நம்பிக்கை தருவதால், திருவிழா காலம் வருவதால் கார்கள் விற்பனை உயரும். இதன் மூலம் சுந்தரம் பைனான்ஸ் கூடுதல் கடன் வழங்கி லாபம் சம்பாதிக்கும் என்று நிர்வாக டி.டி. சீனிவாசராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசு அடிப்படை ஆதார துறைக்கு கூடுதல் முதலீடு ஒதுக்கீடு செய்தால் கட்டுமான வாகன யந்திரங்கள் தேவை அதிகரிக்கும். சுந்தரம் பைனான்ஸ் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்றார் அவர். பொதுவாக நிதித்துறையில் கடும் சவால் உள்ள நிலையில், வாகன உற்பத்தி துறைக்கும் சவால் நிறைந்துள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு சுந்தரம் பைனான்ஸ் செலவு செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார தேக்க நிலையிலும் சுந்தரம் பைனான்ஸ் திறமையான நிர்வாகம் மூலம் லாபம் சம்பாதித்துள்ளது, வராக்கடனை குறைத்து தரமாக செயல்பட்டுள்ளோம் என்றார் அவர்.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தை, 1954ம் ஆண்டில் டி.எஸ்.சந்தானம் நிறுவி உலக தர நிறுவனமாக செயல்படுத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தார். இவரை தொடர்ந்து சேர்மன் எஸ்.விஜி திறமையாக செயல்படுத்தி வருகிறார். நிதி முதலீட்டு நிபுணரும், நிதி ஆராய்ச்சி வல்லுனருமான டி.டி.சீனிவாசராகவன் நிர்வாக இயக்குனராக நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

600 கிளைகள், 3 தலைமுறை

சுந்தரம் பைனான்ஸ் நாடு முழுவதும் 600 கிளைகளுடன் 3 தலைமுறையாக மக்களிடமிருந்து டெபாசிட் பெற்று, பாதுகாப்பாக முதலீடு செய்து தொடர்ந்து லாபம் சம்பாதித்து, பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது. பொருளாதார தேக்க நிலை ஏற்படும்போது, தொலை நோக்குடன் செயல்பட்டு, தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.

இதன் சார்பு நிறுவனங்களாக சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ், சுந்தரம் மியூட்சுவல் பண்ட், சுந்தரம் வீட்டு வசதி பைனான்ஸ், பிபிஓ, சாப்ட்வேர், நிதி திட்டங்கள் விற்பனை போன்றவை செயல்படுகின்றன.

இது தவிர சமூக தொண்டு அமைப்பான டாக்டர் ரங்கராஜன் நினைவு மருத்துவமனை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டு உலக தர மருத்துவ சேவையை சிக்கன கட்டணத்தில் வழங்குகிறது.

சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் தொகை 20% அதிகமாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31 ந் தேதியுடன் இதன் டெபாசிட் தொகை ரூ.3700 கோடியாக உயர்ந்துள்ளது என்றார் டி.டி. சீனிவாசராகவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *