செய்திகள்

சுதந்திர தினம்: 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள்

சென்னை, ஆக. 14–

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-

1. அமரேஷ் புஜாரி (கூடுதல் காவல்துறை இயக்குநர்,

தொழில்நுட்ப சேவைகள், சென்னை)

2. முனைவர் அ.அமல்ராஜ் (கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், சென்னை)

3. சு.விமலா (காவல் துணை ஆணையர், நுண்ணறிவு பிரிவு, சென்னை பெருநகர காவல்)

4. ந. நாவுக்கரசன் (காவல் ஆய்வாளர், கோட்டை போக்குவரத்து ஒழுங்குபிரிவு, திருச்சி மாநகரம்)

5. பா.பிரேம் பிரசாத் (தலைமை காவலர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்)

புலன் விசாரணைக்கான

பதக்கங்கள்

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2021–ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

1. வெ.செல்வி (காவல் ஆய்வாளர், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்)

2. க.சாந்தி (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, கன்னியாகுமரி)

3. எஸ்.ரவி (காவல் ஆய்வாளர், கொமாரபாளையம் காவல் நிலையம், திருச்செங்கோடு உட்கோட்டம், நாமக்கல் மாவட்டம்)

4. க.சாயிலெட்சுமி (காவல் ஆய்வாளர், நேசமணி நகர் வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்)

5. ஆ.அமுதா (காவல் ஆய்வாளர், சத்திரக்குடி காவல் நிலையம், இராமநாதபுரம்)

6. வே.சந்தானலட்சுமி (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திண்டுக்கல்)

7. சு.சீனிவாசன் (காவல் ஆய்வாளர், திருநாவலூர் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

8. மு.கனகசபாபதி (காவல் ஆய்வாளர், பி2 ஆர்.எஸ்.புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், கோவை மாநகரம்)

9. க.ஆடிவேல் (காவல் ஆய்வாளர், தென்காசி காவல் நிலையம், தென்காசி மாவட்டம்)

10. ப.ஆனந்தலட்சுமி (காவல் உதவி ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்டம்)

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *