செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக சமபந்தி விருந்து நிகழ்ச்சி

Spread the love

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

 

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார்.

வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். தி.நகர் சத்யா எம்.எல்.ஏ. உட்பட பலர் உடன் உள்ளனர்.

சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *