செய்திகள் வாழ்வியல்

சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகம் , கல்லீரலைப் பாதுகாக்கும்


நல்வாழ்வுச் சிந்தனைகள்


சுண்டைக்காய் (Turkey berry) பெரும்பாலும் பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் கரீபியன் நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக அவை உலகம் முழுவதும் பரவியுள்ளன.

சுண்டைக்காய் சற்று கசப்பான சுவை கொண்டது. ஆனால் நீங்கள் அவற்றை சரியாக சமைக்கும் போது, நல்ல நறுமணத்துடன் அதிக சுவையை தரும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மக்கள் இதை சுண்டவத்தல், குழம்பு , கூட்டு செய்ய பயன்படுத்துகின்றனர்.சுண்டைக்காயில் முக்கியமாக கால்சியம் மற்றும் இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளன.

எனவே எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சுண்டைக்காய் இன்றியமையாதது.

சுண்டைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 7.03% மட்டுமே உள்ளன. மேலும், இது 86.23% நீரைக் கொண்டுள்ளதால், குறைவான கலோரிகளையே பெற்றுள்ளது.

சுண்டைக்காயில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, எனவே இது செரிமானத்திற்கு சிறந்தது. மேலும், இதில் இரும்புச்சத்து ஏராளமாக இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

100 கிராம் சுண்டைக்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2): நீர்: 86.23%கார்போஹைட்ரேட்: 7.03 கிராம்

புரதம்: 2.32 கிராம் ,கொழுப்பு: 0.27 கிராம், நார்ச்சத்து: 3.9 கிராம், இரும்புச்சத்து: 7.6 மி.கி.,மாங்கனீசு: 1.9 மி.கி.

கால்சியம்: 22 மி.கி.,துத்தநாகம்: 2 மி.கி., வைட்டமின் ஏ: 70 மைக்ரோ கிராம், வைட்டமின் சி:2.68 மிகி சுண்டைக்காய் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1. சுண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

சுண்டைக்காய் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும். இவை இரண்டும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவை.

மேலும், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், சுண்டைக்காய் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் (3, 4).

மேலும், சுண்டைக்காயின் விதை மற்றும் பழ சாற்றில் ஃபிளவனாய்டு (Flavanoid) எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இதனால் சுண்டைக்காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது (5). 2. சுண்டைக்காய் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது.

உங்கள் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து பாதுகாக்க சுண்டைக்காய் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சுண்டைக்காய் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தணிக்கும் என்பதைக் காட்டுகிறது .

மேலும் மற்றொரு ஆய்வில் டோக்சோரூபிகின் என்ற புற்றுநோய் மருந்தினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை சுண்டைக்காய் கணிசமாகக் குறைத்தது .

சுண்டைக்காய் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது

சுண்டைக்காய் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைப் பெற்றுள்ளது.

மேலும் எலிகளில் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சுண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைத்தது.

சுண்டைக்காய் நீரிழிவு நோய்க்காக பாரம்பரியமாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைக்கொண்டு நீரிழிவு எதிர்ப்பு மருந்தை உருவாக்க ஒரு சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன

சுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பிரக்டோஸ் (Fructose) எனப்படும் ஒரு வகையான சர்க்கரை குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளில் நிறைந்துள்ளது. இந்த பிரக்டோஸை அதிகமாக உன்பது உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும் .

சுண்டைக்காய் அதிக பிரக்டோஸ் உட்கொள்ளலால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது

சுண்டைக்காய் புற்றுநோய் செல்கள் உருவாகுவதைத் தடுக்கிறது

சுண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது .

இது புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்க மிகவும் முக்கியமானது.

மேலும் சுண்டைக்காயில் புற்றுநோயை எதிர்க்கும் மெத்தில் காபேட் (Methyl Caffeate) எனும் வேதிப்பொருள் உள்ளது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன

சுண்டைக்காய் இலைச்சாறு இரத்தக் கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வாகத் தெரிகிறது

முதிர்ச்சியடையாத அல்லது சுற்றுச்சூழல் ரீதியாக பாதிக்கப்பட்ட சுண்டைக்காய் விஷம் கொண்டதாக இருக்கலாம், ஆனால் அது அரிதானது.

இவ்வாறு நச்சுத்தன்மை கொண்ட சுண்டைக்காயை உண்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை உருவாக்கியதாக ஒரு ஆய்வு காட்டுகிறது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *