நல்வாழ்வுச் சிந்தனைகள்
சுண்டைக்காய் பெரும்பாலும் வெப்பமண்டலங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுண்டைக்காயின் அறிவியல் பெயர் சோலனம் டோர்வம் ஆகும். இது தென் அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து பரவியதாக கருதப்படுகிறது
சுண்டைக்காய் பெரும்பாலும் பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் கரீபியன் நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, அவை உலகம் முழுவதும் பரவியுள்ளன.
சுண்டைக்காய் சற்று கசப்பான சுவை கொண்டது. ஆனால் நீங்கள் அவற்றை சரியாக தயாரிக்கும் போது, நல்ல நறுமணத்துடன் அதிக சுவையை தரும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மக்கள் இதை சுண்டவத்தல் குழம்பு செய்ய பயன்படுத்துகின்றனர்.சுண்டைக்காயில் முக்கியமாக கால்சியம் மற்றும் இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளன.
எனவே, எலும்புகள் – பற்களின் ஆரோக்கியத்திற்கு சுண்டைக்காய் இன்றியமையாதது.
சுண்டைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 7.03% மட்டுமே உள்ளன. மேலும், இது 86.23% நீரைக் கொண்டுள்ளதால், குறைவான கலோரிகளையே பெற்றுள்ளது.
சுண்டைக்காயில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, எனவே, இது செரிமானத்திற்கு சிறந்தது. மேலும், இதில் இரும்புச்சத்து ஏராளமாக இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
100 கிராம் சுண்டைக்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
நீர்: 86.23%
கார்போஹைட்ரேட்: 7.03 கிராம்
புரதம்: 2.32 கிராம்
கொழுப்பு: 0.27 கிராம்
நார்ச்சத்து: 3.9 கிராம்
இரும்புச்சத்து: 7.6 மி.கி.
மாங்கனீசு: 1.9 மி.கி.
கால்சியம்: 22 மி.கி.
துத்தநாகம்: 2 மி.கி.
வைட்டமின் ஏ: 70 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி: 2.68 மிகி சுண்டைக்காய் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சுண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
சுண்டைக்காய் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும். இவை இரண்டும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவை.
மேலும், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், சுண்டைக்காய் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
மேலும், சுண்டைக்காயின் விதை மற்றும் பழ சாற்றில் ஃபிளவனாய்டு எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இதனால் சுண்டைக்காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது . சுண்டைக்காய் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது
உங்கள் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கும்.
எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சுண்டைக்காய் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தணிக்கும் என்பதைக் காட்டுகிறது .