புதுடெல்லி, மே 3–
நாடு முழுவதும் வசூலாகும் சுங்கக் கட்டணத்தின் ஒருநாள் வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2021–ம் ஆண்டு முதல் பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம், சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29–ந்தேதி ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.193.15 கோடி வசூலாகியுள்ளது. இது ஒருநாள் சுங்கக் கட்டண வசூலின் புதிய உச்சமாக அமைந்துள்ளது.