செய்திகள்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு

சென்னை, ஏப்.1–

சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1–ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1–ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *