செய்திகள் வாழ்வியல்

சுக்கு ,வால் மிளகு உட்கொண்டால் கபம், வாதம், சைனஸ் ,தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி குணமாகும்

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும். கப நோய்களைக் குணப்படுத்தும் கண் நோய்கள் நீங்கும். பார்வை தெளிவடையும். வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் அதிமதுரம் சரி செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும். சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

சுக்கு (Dried ginger)

இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து சுக்கு எடுக்கப்படுகிறது . இது, காரத்தன்மை கொண்டது.

சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து வறுத்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

செரிமான சிக்கல் நீங்க , அரை தேக்கரண்டி சுக்குப்பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *