சிறுகதை

சீரியல் பைத்தியம் – ஆர்.எஸ். மனோகரன்

சீரியல் பைத்தியம் ஆன மனைவி ராணியை இன்னிக்கி அசத்திப்புட வேண்டும் என்ற முடிவுடன் வீட்டில் காலடி வைத்தான் ராஜா.

கையில் ஒரு ரெட்டை ரோஜா அப்புறம் செம்பருத்தி வைத்திருந்தான்.

மகராசி, என் நாயகி, வீட்டின் திருமகள் எங்கே இருக்காளோ தெரியலையே என தேடினான் ராஜா. கிச்சனில் அவளைப் பார்த்ததும் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ எனக் கூவினான். கையில் பூக்களுடன் அவளைப் பார்த்து பூவே பூச்சூடவா என அவன் நீட்ட அவள்.. வந்து தலையைக் காட்ட, ஒரே மகிழ்ச்சிதான் போங்கள்..

நீதானே என் பொன்வசந்தம் என ராஜா பாட ஆரம்பித்தான்; சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திடும் நேரமிது என சொக்கினான்.

‘என்ன ஐயாவுக்கு மூடு வந்துருச்சா’ என்றாள் ராணி.

நாம் இருவர் நமக்கு இருவர் ஆக வேண்டாமா என அவள் கையைப் பிடித்து இழுத்தான்…. கையை விலக்கிக் கொண்டு, ‘இந்தாங்க லிஸ்ட். பாண்டியன் ஸ்டோர்ஸ் போய் சாமான் வாங்கிட்டு வாங்க’ என நகர்ந்தாள்.

அன்றிரவு, பெட்டில் ராஜா ராணியிடம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என கதை சொல்ல ஆரம்பித்தான்.

அது யாருங்க ? என்றாள் ராணி.

‘வேற யாரு, நீதான் என் கோகுலத்தில் சீதை’ என வழிந்தான். அவன் பற்றிய கைகளை அவள் விடுவித்தாள். ‘நாம் பிரியாத வரம் வேண்டும்; தருவியா?’ என்றான் ராஜா.

அப்போதிலிருந்து நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்குப் புரியுது; நான் சீரியல் பைத்தியம்ன்னு சொல்றீங்க அப்படித்தானே? என்றாள் ராணி.

‘உங்களுக்குத் தெரியுமா? எல்லா சீரியல்லேயும் பொம்பளைங்களை மோசமான வில்லியா காட்டுறதாலே நான் இப்போ சீரியல் பக்கமே போறது இல்லை’ என ஒரு போடு போட்டாள் ராணி.

அவ்வளவுதான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *